திருநகரில் நகர்புற நலவாழ்வு மைய வளாகத்தில் தேங்கிய தண்ணீரால் சுகாதார கேடு


திருநகரில் நகர்புற நலவாழ்வு மைய வளாகத்தில்  தேங்கிய தண்ணீரால் சுகாதார கேடு
x

மதுரை திருநகரில் நகர்நலவாழ்வு மையம் வளாகத்தில் சுகாதாரம் கேள்விகுறியாக இருந்து வருவதால் பொதுமக்களிடையை அச்சம் நிலவுகிறது.

மதுரை

திருப்பரங்குன்றம்,


மதுரை திருநகரில் நகர்நலவாழ்வு மையம் வளாகத்தில் சுகாதாரம் கேள்விகுறியாக இருந்து வருவதால் பொதுமக்களிடையை அச்சம் நிலவுகிறது.

கழிவுநீர் வாய்க்கால் சேதம்

மதுரை மாநகராட்சி 94-வது வார்டில் நெசவாளர்கள் அதிகம் வசிக்ககூடிய மகாலட்சுமி காலனியில் அங்கன்வாடி மையமும் நியாயவிலை கடையும் அடுத்தடுத்து வெவ்வேறு கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது ரூ.25 லட்சத்தில் புதியதாக நகர்ப்புற நலவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதை அப்பகுதி மக்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் இந்த பகுதி பெரும்பள்ளமாக உள்ளது.

நகர்புற நல வாழ்வுமையம் மற்றும் அங்கான்வாடி மையத்தின் இடைப்பட்ட குறுகிய பாதையின் வழியே நியாயவிலை கடைக்கு குடிமை பொருட்கள் ஏற்றி வரக்கூடிய லாரிகள் கழிவுநீர் கால்வாய் வழியில் போட்டுள்ள மிககுறுகிய சிமெண்டு தளத்தில் சக்கரங்கள் ஏறி, இறங்குவதில் கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் நாளடைவில் கழிவுநீர் வாய்க்கால் முழுமையாக சேதமடைந்து கழிவுநீர் வெளியேற முடியாமல் ரோட்டில் ஓடும் நிலை ஏற்படும்

சுகாதாரம் கேள்விகுறி

இதற்கிடையே அங்கன்வாடி மையம், நியாயவிலை மற்றும் நகர்புறநல வாழ்வுமையம் வளாகத்தில் உள்ள பெரும்பள்ளத்தில் மழைநீர் தேங்கி குளமாக உருமாறி வருகிறது. ஒரே இடத்தில் நீண்டநாட்கள் தண்ணீர் கிடந்துவருவதால் சகதியும், சேறுமாகவும், பச்சையாக பாசிபடர்ந்தும் குப்பைகளும் கலந்து சுகாதாரம் கேள்விகுறியாக இருந்து வருகிறது. மேலும் இதே பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் நாலாபுறமும் முட்செடிகள் வளர்ந்து வருகிறது. மேலும் அந்த கிணற்றின் தண்ணீரில் குப்பைகள், காலி மதுபாட்டில்களுடன் பாசி படர்ந்து இருப்பதால் அதில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது.

நோய் குணமாகுவதற்காக நகர்புறநலவாழ்வு மையத்திற்கு செல்கிறோம். ஆனால் நகர்நல மையம் உள்ள இடத்தில் சுகாதாரம் கேள்விகுறியாக உள்ளது. இந்த நிலை மாறுவதற்கு பள்ளத்தில் மழைநீர் தேங்காதபடி மண்பரப்பி மேடாக உருவாக்க வேண்டும். கிணற்றில் மேல் மூடி போடுவதோடு சுகாதாரத்திற்கு வழி ஏற்படுத்த வேண்டும். கழிவுநீர் வாய்க்கால் சேதமடையாதபடி நியாயவிலை கடைக்கு குடிபொருட்கள் கொண்டு செல்லுவதில் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story