உசிலம்பட்டியில், பொதுமக்கள் சாலை மறியல்
அதிக வோல்டஜே் மின்சாரம் வருவதாக கூறி உசிலம்பட்டியில், பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மதுரை
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி-தேனி ரோட்டில் உள்ள சீதாதேவர் தெருவில் கடந்த ஒரு மாதமாக அதிக வோல்டேஜ் மின்சாரம் வருவதாக கூறப்பட்டது. அந்த தெருவில் உள்ள நித்தியா என்ற பெண்ணை மின்சாரம் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் உசிலம்பட்டி-தேனி சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த போலீசார் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மின்சார துறை அதிகாரிகளை அழைத்து விரைவில் சரி செய்து விடுவதாக கூறினர். இதையடுத்து போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story