உத்தமபாளையத்தில் முல்லைப்பெரியாறு படித்துறையில் குவிந்து கிடக்கும் கழிவு துணிகள்


உத்தமபாளையத்தில் முல்லைப்பெரியாறு படித்துறையில் குவிந்து கிடக்கும் கழிவு துணிகள்
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 4 Jun 2023 8:01 AM IST)
t-max-icont-min-icon

உத்தமபாளையத்தில் முல்லைப்பெரியாறு படித்துறையில் கழிவு துணிகள் குவிந்து கிடக்கின்றன.

தேனி

உத்தமபாளையத்தில் திருக்காளத்தீஸ்வரர்-ஞானாம்பிகை கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் ராகு, கேது பரிகார ஸ்தலமாகவும் சிறப்பு பெற்று விளங்குகிறது. இதனால் தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இவ்வாறு கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் கோவில் அருகே ஓடும் முல்லைப்பெரியாற்றில் நீராடுவது வழக்கம்.

மேலும் ஆற்றின் கரையோரத்தில் உள்ள விநாயகர் கோவில் பகுதியில் பரிகாரம் செய்வார்கள். இந்நிலையில் ஆற்றின் படித்துறையில் பழைய துணிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் ஆற்றில் குளிக்க வரும் பக்தர்கள் முகம் சுளிக்கும் நிலை உள்ளது. மேலும் படித்துறையில் துணி துவைக்க வருபவர்களும் அவதியடைகின்றனர். இந்த துணிகள் ஆற்றில் குளிக்கும் போது கால்களில் சிக்கி விபத்தும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆற்றின் கரையோரம் மற்றும் படித்துறையில் பழைய துணிகள் போடுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story