விளாத்திகுளம்மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா


விளாத்திகுளம்மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில்  கார்த்திகை தீப திருவிழா
x
தினத்தந்தி 8 Dec 2022 12:15 AM IST (Updated: 8 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம்மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

விளாத்திகுளம்:

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலையில் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து விளக்கேற்றி வழிபட்டனர். சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு கோவிலில் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி, அம்பாள் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

தொடர்ந்து விளாத்திகுளம் வேம்பார் ரோட்டில் சுவாமி, அம்பாள் முன்னிலையில் பனை மரம் மற்றும் பனை ஓலைகளால் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. அங்கிருந்து காய்கறி மார்க்கெட், மதுரை ரோடு வழியாக சுவாமி திருவீதி உலா நடந்தது. கோவில் மேற்கு வாசல் பகுதியில் 2-வது சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story