அமர்ந்தாளம்மன், துர்கா பரமேஸ்வரி கோவில் தேரோட்டம்


அமர்ந்தாளம்மன், துர்கா பரமேஸ்வரி கோவில் தேரோட்டம்
x

அமர்ந்தாளம்மன், துர்கா பரமேஸ்வரி கோவில் தேரோட்டம்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே சேந்தங்குடியில் அமர்ந்தாளம்மன், துர்கா பரமேஸ்வரி கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி உற்சவ திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனைகளும், அம்பாள் வீதி உலாவும் நடந்தன. தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. இதையொட்டி அமர்ந்தாளம்மன் மற்றும் துர்கா பரமேஸ்வரி 2 தேர்களில் தனித்தனியாக எழுந்தருளினர். வழியெங்கும் வீடுகளின் முன்பு பக்தர்கள் மாவிளக்கு இட்டும், தீபாராதனை எடுத்தும் வழிபட்டனர். தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story