ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம்


ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றம்
x

திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே ஆத்தங்கரை பள்ளிவாசல் கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஆத்தங்கரை பள்ளிவாசல்

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள ஆத்தங்கரை பள்ளிவாசல் ஹசரத் சையதலி பாத்திமா (ரலி), ஹசரத் சேகு முகமது (ஒலி) தர்கா கந்தூரி விழா ஆண்டு தோறும் நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று காலை கத்முல் குர்ஆன் ஓதுதல் தொடங்கியது. தொடர்ந்து குர்ஆன் தமாம் செய்யப்பட்டது. பின்னர் அரண்மனை புலிமான் குளத்தில் இருந்து பரம்பரை டிரஸ்டி எச்.ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி யானை மீது கொடி, சந்தன குடத்தை ஊர்வலமாக தர்காவிற்கு கொண்டு சென்றார்.

கொடியேற்றம்

ஊர்வலம் செல்லும் வழியில் ராமன்குடி முத்துகிருஷ்ணாபுரத்தில் அருள் துரை நாடார் வீட்டில் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு காணிக்கை, அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இது மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்தது.

பின்னர் ஊர்வலம் ஆத்தங்கரை பள்ளிவாசலை அடைந்ததும் சந்தன குடத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் யானை மீது இருந்தபடி பரம்பரை டிரஸ்டி ஹபிபுர் ரஹ்மான் பிஜிலி கொடியேற்றி வைத்தார்.

அப்போது அங்கு கூடி இருந்தவர்கள் நாரே தக்குபீர் அல்லாகு அக்பர் என கோஷம் எழுப்பினர். பின்னர் தர்காவில் சந்தனம் மெழுகுதல், மாலையில் மவ்லூது ஷரிப் ஓதுதல், ராத்திப்புத்துல், இரவில் இஸ்லாமிய கச்சேரி நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.

நேர்ச்சை வினியோகம்

இன்று (திங்கட்கிழமை) காலை சிறப்பு துவா ஓதப்பட்டு நேர்ச்சை வினியோகம் செய்யப்படுகிறது.

ஏற்பாடுகளை டிரஸ்டிகள் நயால் அஹ்மத் பிஜிலி, ஹபிபுர் ரகுமான் பிஜிலி ஆகியோர் செய்து இருந்தனர்.


Next Story