தருமபுரத்திற்கு ஆதீனம் மீண்டும் நடைபயணம்
சீர்காழி சட்டைநாதர் கோவிலில் இருந்து தருமபுரத்திற்கு ஆதீனம் மீண்டும் நடைபயணம் திரளான பக்தர்கள் பங்கேற்றார்
மயிலாடுதுறை
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டை நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் 32 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த கோவில் குடமுழுக்கு விழா தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் கடந்த 24-ந் தேதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து நேற்று மாலை சட்டைநாதர் கோவிலில் இருந்து தருமபுரம் ஆதீனம் மீண்டும் சொக்கநாதரோடு யானை, குதிரை, ஒட்டகம், காளை மாடுகளோடு இசை வாத்தியம் மேளம் தாளம் முழங்கிட நடை பயண பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த நடைபயண யாத்திரையில் தமிழ் சங்கத் தலைவர் மார்க்கோனி திருப்பணி உபயதாரர்கள் முரளி, வக்கீல் சேயோன், கோவி நடராஜன், பந்தல் முத்து, கோவில் நிர்வாகி செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story