கயத்தாறு அருகே ஆத்திகுளம்சந்தன மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா
கயத்தாறு அருகே ஆத்திகுளம் சந்தன மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.
கயத்தாறு:
கயத்தாறு அருகே ஆத்திகுளம் சந்தன மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்தினர்.
சந்தன மாரியம்மன் கோவில்
கயத்தாறு அருகேயுள்ள தெற்கு இலந்தைகுளம் பஞ்சாயத்து ஆத்திகுளம் சந்தன மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா கடந்த 8 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது.
கடந்த 11-ந் தேதி மாலை 6 மணிக்கு கொடியழைப்புடன் வடக்கத்தியம்மன் சூரைவீசுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று இரவு வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று முன்தினம் மதிய கொடை, மாலை 6 மணிக்கு அம்மன் பூ அலங்கார சிறப்பு பூஜை, பால்குட ஊர்வலம், முளைப்பாரி உர்வலம், அக்னி சட்டி ஊர்வலம் உள்பட பல்வேறு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பூக்குழி இறங்கினர்
இரவு 10.30 மணிக்கு கோவில் முன்பு பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கினர். இதனைத் தொடர்ந்து சாமக்கொடை நடைபெற்றது. அம்பாள் வீதி வலம் வருதல், ஊர் விளையாடல் நடந்தது. அதிகாலையில் ஏராளமான பக்தர்கள் முடி காணிக்கை ெசலுத்தினர். கோவில் முன்பு பக்தர்கள் குடும்பத்தினருடன் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். தொடர்ந்து அம்பாள் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் மும்பை, பெங்களுர், குஜராத், மகாராஷ்டிரா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து தங்கி சாமி தரிசனம் செய்தனர்.