தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு வீரர்கள் சென்னை புறப்பட்டு சென்றனர்


தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு வீரர்கள் சென்னை புறப்பட்டு சென்றனர்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:15 AM IST (Updated: 30 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு வீரர்கள் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுகளில் பங்கேற்க சென்னை புறப்பட்டு சென்றனர்.

தூத்துக்குடி

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் தூத்துக்குடி மாவட்ட வீரர், வீராங்கனைகளை நேற்று வழியனுப்பி வைத்தனர்.

முதல்-அமைச்சர் கோப்பை

முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான சிலம்பம், கையுந்து பந்து, கபடி ஆகிய விளையாட்டு போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 4-ந் தேதி வரை சென்னையில் நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்பதற்கான தூத்துக்குடி மாவட்ட சிலம்பம், கையுந்து பந்து, கபடி அணி வீரர், வீராங்கனைகள் மற்றும் அணி மேலாளர்கள் 73 பேர் நேற்று சென்னைக்கு 2 தனி பஸ்களில் புறப்பட்டனர்.

வாழ்த்து

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கில் இருந்து புறப்பட்ட வீரர், வீராங்கனைகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.கண்ணதாசன் ஆகியோர் கொடியசைத்து வழியனுப்பி வைத்தனர். போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்துக்கு பெருமை சேர்க்குமாறு வாழ்த்தினர்.

நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், பயிற்சியாளர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.


Next Story