கிருஷ்ணகிரியில் தொடங்கியது:வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்1,400 மாணவ, மாணவிகள் பங்கேற்பு


கிருஷ்ணகிரியில் தொடங்கியது:வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள்1,400 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
x

கிருஷ்ணகிரியில் வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் 1,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டிகள் நேற்று தொடங்கின. இதில் 1,400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

தடகள போட்டிகள்

கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில், பள்ளிக்கல்விதுறை சார்பில் வருவாய் மாவட்ட அளவிலான 2 நாள் தடகள போட்டி நேற்று தொடங்கியது. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி தொடங்கி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், நகராட்சி தலைவர் பரிதாநவாப், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் முனிராஜ், தொடக்க கல்வி அலுவலர் ஆனந்தன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் துரை, பெருமாள் மணிமேகலை கல்லூரி இயக்குனர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

1,450 பேர் பங்கேற்பு

இப்போட்டிகள், 14, 17 மற்றும் 19 வயது என மூன்று பிரிவுகளில், 100, 200, 800, 1,500, 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் போட்டியும், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் ஆகிய போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 1400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட உள்ளன. முதலிடம் பெறும் மாணவ, மாணவிகள் சென்னையில் நடக்கும் மாநில அளவிலான தடகள போட்டியில் கலந்து கொள்ள தகுதி பெறுகின்றனர். நிகழ்ச்சியில், உடற்கல்வி ஆய்வாளர் துரை, உடற்கல்வி இயக்குனர்கள் கிருஷ்ணன், ஜான்பாய், உடற்கல்வி ஆசிரியர்கள் சத்தியநாதன், பார்த்தீபன், அருளரசு, ரகுசரவணன், ஜோதி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர்.

இதில், கட்டிகானப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரிதேவி, கவுன்சிலர்கள் ஜெயகுமார், பிர்தோஷ்கான், செந்தில்குமார், சுனில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story