சரக அளவிலான தடகள போட்டி


சரக அளவிலான தடகள போட்டி
x

மாரண்டஅள்ளியில் சரக அளவிலான தடகள போட்டியில் 500 மாணவர்கள் பங்கேற்றனர்.

தர்மபுரி

மாரண்டஅள்ளி:

பாலக்கோடு சரக அளவிலான தடகள விளையாட்டு போட்டி மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 500-க்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த போட்டிகளை பாலக்கோடு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பி.கே.அன்பழகன் தொடங்கி வைத்து வீரர்களை அறிமுகப்படுத்தினார். இதில் பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் கார்த்திகா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு துணை அமைப்பாளர் ராஜபார்ட் ரங்கதுரை, மாவட்ட பிரதிநிதி பன்னீர்செல்வம் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கு ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், கம்பு ஊன்றி தாண்டுதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story