மாணவ- மாணவிகளுக்கான தடகள போட்டி


மாணவ- மாணவிகளுக்கான தடகள போட்டி
x
தினத்தந்தி 27 March 2023 6:45 PM GMT (Updated: 27 March 2023 6:45 PM GMT)

மயிலாடுதுறையில் மாணவ- மாணவிகளுக்கான தடகள போட்டி நடந்தது

மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே லட்சுமிபுரத்தில் உள்ள தனியார் பள்ளி விளையாட்டு மைதானத்தில் மாணவ- மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டி நடந்தது. இதில் மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 30 அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு 100, 200 மற்றும் 500 மீட்டர் ஓட்டப்பந்தயங்கள் நடத்தப்பட்டது.வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டியின் முடிவில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு தனித்தனியே ஓட்டப்பந்தய போட்டி நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு மரக்கன்றுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட பள்ளி கல்வித்துறை செய்திருந்தது.


Next Story