மாணவர்களுக்கு தடகள போட்டிகள்


மாணவர்களுக்கு தடகள போட்டிகள்
x

மயிலாடுதுறையில் மாணவர்களுக்கு தடகள போட்டிகள் ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை:

மயிலாடுதுறை மாவட்ட உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் உடற் திறன் கழகம் மற்றும் பள்ளிக் கல்வித் துறை சார்பில் 2022-2023-ம் ஆண்டுக்கான 14, 17, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான குறுவட்ட அளவிலான தடகளபோட்டிகள் இந்திய விளையாட்டு ஆணைய மைதானத்தில் நடந்தது. தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) சீதாலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் காந்திமதி முன்னிலை வகித்தர். வைத்தார். மூவலூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும், குறுவட்ட செயலாளருமான மஞ்சுளா வரவேற்றார். இந்த குறுவட்ட அளவிலான தடகளப் போட்டிகளை ஒன்றியக் குழுத்தலைவி காமாட்சிமூர்த்தி தொடங்கி வைத்தார். ஒலிம்பிக்சுடரை மூவலூர் அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மூவலூர் மூர்த்தி தொடங்கி வைத்தார். பெற்றோர் ஆசிரியர் கழக இணை செயலாளர் துரை.சரவணன் ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார்.

100 மீ, 200 மீ, 400 மீ, 800 மீ, 1500மீ நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் உட்பட14 போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் அரசுபள்ளிகள், தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் என மொத்தம் 125 பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். தொடக்க நிகழ்ச்சியில் உடற்கல்வி ஆசிரியர் குழந்தைவேலு நன்றி கூறினார்.


Next Story