ஆத்தூர் சோமநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண உற்சவ திருவிழா


ஆத்தூர் சோமநாத சுவாமி கோவில்  ஐப்பசி திருக்கல்யாண உற்சவ திருவிழா
x
தினத்தந்தி 7 Oct 2022 12:15 AM IST (Updated: 7 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் சோமநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண உற்சவ திருவிழா கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூர் சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவிலில் ஐப்பசி திருக்கல்யாண உற்சவ திருவிழா வரும் 12-ந் தேதி தொடங்குகிறது.இவ்விழாவிற்கான முகூர்த்தக்கால் நடும் வைபவம் நேற்று காலையில் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. கோவில் பிரகாரம் சுற்றி முகூர்த்தக்கால் கொண்டுவரப்பட்டு சிறப்பு பூஜையுடன் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story