ஆத்தூர் சோமநாத சுவாமி கோவில் தேரோட்டம்


ஆத்தூர்  சோமநாத சுவாமி   கோவில்  தேரோட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2022 12:15 AM IST (Updated: 22 Oct 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் சோமநாத சுவாமி கோவில் தேரோட்டம் நடந்தது.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

ஆத்தூரில் உள்ள இந்து சமய அறநிலைத்துறைக்கு பத்தியப்பட்ட சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா கடந்த 12-ந்தேதி தொடங்கியது.

தினமும் காலையில் சிறப்பு பூஜைகளும், மாலையில் அம்பாள்- சுவாமி திருவீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பத்தாம் திருவிழாவான நேற்று காலையில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

இவ்விழாவில் கோவில் செயல் அலுவலர் சாந்திதேவி, தக்கார் தமிழ்செல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story