ஏ.டி.எம். திருட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பயிற்சி


ஏ.டி.எம். திருட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பயிற்சி
x

நாகையில் ஏ.டி.எம். திருட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பயிற்சி போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமையில் நடந்தது

நாகப்பட்டினம்

நாகை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஏ.டி.எம். திருட்டுக்கு எதிரான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் தலைமை தாங்கினார். துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இதில் ஏ.டி.எம்.களில் நடக்கும் அசம்பாவிதங்கள், திருட்டு சம்பவங்கள் குறித்தும், அதனை தடுத்து பாதுகாக்கும் வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. முகாமில் நாகை மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு வங்கி அதிகாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story