திங்கள்சந்தையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; வாலிபர் கைது


திங்கள்சந்தையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; வாலிபர் கைது
x

திங்கள்சந்தை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

திங்கள்சந்தை:

திங்கள்சந்தை அருகே ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி

திங்கள்சந்தை பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி நடந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலசுந்தரம் தலைமையிலான போலீசார் நெய்யூர் கிராம நிர்வாக அலுவலகம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.

வாலிபர் கைது

பின்னர் இரணியல் போலீஸ் நிலையம் அழைத்து வந்து கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.

இதில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் மீன்பிடி தொழிலாளி இன்னாசி லோயோலா (வயது 30) என்பது தெரியவந்தது.

மேலும் இவர் திங்கள்சந்தை கோவில் அருகே உள்ள ஒரு நகை கடையில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதும் அம்பலமானது. இதேபோல் செல்ேபான் கடையின் கண்ணாடியை உடைத்து மாடல் செல்போன்களையும் திருடி சென்றுள்ளார்.

தற்போது மேற்கு நெய்யூர் அருகே அய்யன்பாறவிளை பகுதியில் ஒரு வாடகை வீடு எடுத்து தங்கி வந்துள்ளார். இந்த சமயத்தில் தான் அவர் கைவரிசை காட்டி வந்துள்ளார். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்னாசியை கைது செய்தனர்.


Next Story