உடன்குடியில் பூட்டிக்கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க கோரி வியாபாரிகள் போராட்டம்
உடன்குடியில் பூட்டிக்கிடக்கும் ஏ.டி.எம். மையத்தை திறக்க கோரி வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
உடன்குடி:
உடன்குடி பஸ் நிலையம் செல்லும் சாலையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வந்தது. எந்திரங்கள் பழுதடைந்ததால், கடந்த ஒரு மாதமாக அந்த மையம் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள பொதுமக்கள், வியாபாரிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வந்தனர். இது குறித்து வங்கி நிர்வாகத்திடம் பலமுறை கூறியும் நடவடிக்கை மையத்ைத திறக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த உடன்குடி வியாபாரிகள் முன்னேற்ற சங்க தலைவர் ஆம்புரோஸ் தலைமையில் வியாபாரிகள், பொதுமக்கள் நேற்று காலையில் ஏ.டி.எம். மையம் முன்பு திரண்டனர். அந்த மையத்துக்கு மாலை அணிவித்தும் தேங்காய், பத்தி கொளுத்தி படையலிட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்னும் ஒருவாரத்தில் இந்த ஏ.டி.எம். மையம் செயல்படவில்லை என்றால், தொடர் போராட்டம் நடத்தத்தில் ஈடுபடப்போவதாக வியாபாரிகள் அறிவித்துள்ளார்.