ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரூ.10 ஆயிரத்தை ஒப்படைத்த வாலிபர்
ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரூ.10 ஆயிரத்தை ஒப்படைத்த வாலிபரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.
வேலூர்
பேரணாம்பட்டு பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவர் நேற்று முன்தினம் மொர்சப்பள்ளியில் உள்ள ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுப்பதற்காக சென்றார். அங்கு ரூ.10 ஆயிரம் கீழே கிடந்தது.
அதனை எடுத்த நந்தகுமார் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அங்கு சென்று பணத்தை பெற்று இதுதொடர்பாக விசாரித்தனர்.
இதற்கிடையே பணத்தை தவறவிட்ட விஜய் என்பவர் அந்த ஏ.டி.எம். மையத்துக்கு வந்தார். அவரிடம் பணம் எடுத்ததற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்களை போலீசார் சரிபார்த்து ரூ.10 ஆயிரத்தை ஒப்படைத்தனர்.
இதனை அறிந்த வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், நந்தகுமாரின் நேர்மையை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.
Related Tags :
Next Story