அட்மா திட்ட கூட்டம்
அட்மா திட்ட கூட்டம் நடந்தது.
பெரம்பலூர்
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம், நொச்சிக்குளத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) திட்டத்தில் உழவர் பெருந்திரள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) கீதா மற்றும் துணை இயக்குனர்களின் வழிகாட்டுதலின்படி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜசேகரன், துணை அலுவலர் ராமச்சந்திரன், பெரம்பலூர் மாவட்ட வேளாண்மை அலுவலர் ரமேஷ் (மண் பரிசோதனை நிலையம்) ஆகியோர் கலந்து கொண்டு அங்ககப் பண்ணையம், மண்வள மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நுண்ணீர் பாசனம், கிரைன்ஸ் விண்ணப்ப பதிவு முக்கியத்துவம் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் போன்ற திட்டங்களைப் பற்றி விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர். கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டனர். பின்னர் மரக்கன்றுகள் நடப்பட்டது.
Related Tags :
Next Story