ஆத்மா திட்ட உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்


ஆத்மா திட்ட உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம்
x

தலைஞாயிறில் ஆத்மா திட்ட உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

தலைஞாயிறு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஆத்மா திட்ட உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம். கூட்டத்திற்கு மாநில விவசாயிகள் ஆலோசனைக்குழு உறுப்பினர் மகா குமார் தலைமை தாங்கினார். வேளாண் அலுவலர் நவீன்குமார்,துணை வேளாண்மை அலுவலர் வேதரத்தினம், உதவி விதை அலுவலர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது, செயல் பண்ணை பள்ளி நடத்துவது ஆகியவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் அட்மா திட்ட குழுவைச் சேர்ந்த சேவியர், பிரபாகரன், வீரகுமார், ரவிச்சந்திரன், உதயகுமார், மாசிலாமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாசேதுங் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் செய்திருந்தார்.


Next Story