வாலிபரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி தாக்குதல்
வாலிபரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி தாக்கி உள்ளனர்.
கந்தர்வகோட்டை மட்டங்கால் கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி மகன் ரெங்கநாதன் (வயது 35). அதே ஊரை சேர்ந்த அவரது உறவினர்கள் வீரபாண்டி (30), முருகேசன் (25), இவர்களது நண்பர் ராஜ்குமார். ரெங்கநாதனுக்கும், வீரபாண்டி, முருகேசன் ஆகியோருக்கும் இடையே இடப்பிரச்சினை இருந்துள்ளது. இந்நிலையில் வீரபாண்டி உள்பட 3 பேரும் ரெங்கநாதனை வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டும் என்று அழைத்துள்ளனர். இதை நம்பி அங்கு சென்ற ரெங்கநாதனின் கண்ணில் மிளகாய் பொடியை தூவி தாக்கினர். பின்னர் தைலமரக் காட்டிற்கு அழைத்து சென்று அடித்து உதைத்துள்ளனர். மேலும் கொட்டகையில் ரெங்கநாதனை கட்டி வைத்து தண்ணீரில் தலையை அமுக்கி அடித்துள்ளனர். இதில் மயக்கம் அடைந்த ரங்கநாதனை அங்கேயே விட்டு விட்டு 3 பேரும் தப்பி சென்று விட்டனர். ரெங்கநாதனின் சத்தத்தை கேட்ட அந்த வழியாக சென்றவர்கள் ரெங்கநாதனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்த புகாரின் பேரில், கந்தர்வகோட்டை ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து வீரபாண்டி உள்பட 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.