தந்தை-மகள் உள்பட 3 பேர் மீது தாக்குதல்


தந்தை-மகள் உள்பட 3 பேர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 16 Jun 2023 12:15 AM IST (Updated: 16 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
தேனி

தேனி அருகே பூதிப்புரத்தை சேர்ந்த அன்பழகன் மனைவி வீரகாமு (வயது 21). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று அதே ஊரைச் சேர்ந்த முத்துகாமு (60), முருகன் உள்பட சிலர் வீரகாமுவை பார்த்து ஆபாசமாக பேசி அவருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அதை வீரகாமு தட்டிக் கேட்டபோது அவரை அவர்கள் தாக்கினர். அதை தடுக்க வந்த அவருடைய தந்தை சன்னாசி, உறவினர் சின்னமணி ஆகியோரையும் அவர்கள் தாக்கினர். இதில் காயம் அடைந்த 3 பேரும் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து வீரகாமு கொடுத்த புகாரின் பேரில், முத்துகாமு, முருகன், அவருடைய மனைவி ராஜலட்சுமி உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story