ஜோதிடர் மீது தாக்குதல்
அக்காளை அடித்த ஆத்திரத்தில், ஜோதிடரை தாக்கிய அண்ணன்-தம்பிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
திண்டுக்கல்
அய்யலூர் அருகே உள்ள தங்கம்மாபட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 33). இவர், ஜோதிடம் பார்ப்பதுடன் பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். அவருடைய மனைவி மஞ்சுளா. கடந்த சில தினங்களுக்கு முன்பு கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சுரேஷ், மஞ்சுளாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மஞ்சுளாவின் தம்பிகளான ஹரிஹரன், அருண்குமார் ஆகியோர் சேர்ந்து சுரேசை கட்டையால் தாக்கினர். இதில் அவரது பற்கள் உடைந்ததாக கூறப்படுகிறது. தாக்குதலில் காயமடைந்த சுரேஷ், திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் சுரேஷ் புகார் கொடுத்தார். அதன்பேரில் ஹரிஹரன், அருண்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story