பேக்கரி கடை உரிமையாளர் மீது தாக்குதல்
பழனியில் பேக்கரி கடை உரிமையாளர் மீது வாலிபர் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.
திண்டுக்கல்
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் அம்சத் (வயது 52). இவர் பழனி பழைய தாராபுரம் சாலை பகுதியில் பேக்கரி நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் கடைக்கு வந்த வாலிபர் ஒருவர் பொருட்களை வாங்கிவிட்டு கடை ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அதை தடுக்க வந்த கடை உரிமையாளர் அம்சத் மற்றும் ஊழியர்களை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்தவர்கள் பழனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கான அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்து பழனி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அம்சத்தின் கடையில் தகராறில் ஈடுபட்ட வாலிபர் அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இது பழனி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story