அண்ணன் மீது தாக்குதல்- தம்பி மீது வழக்கு
அண்ணன் மீது தாக்குதல்- தம்பி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் காயிதே மில்லத் 5-வது தெருவைச் சேர்ந்தவர் சோமசுந்தரராஜ் மகன் ஜான் பிரின்ஸ் (வயது 52). இவரது தம்பி ஜோதி பிரசன்னா. ஜான்பிரின்ஸ் சொத்தை பாகப்பிரிவினை செய்து அளவீடு செய்ய ஏற்பாடு செய்து வந்துள்ளார். சொத்தை பங்கு பிரிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஜான் பிரின்ஸை, அவரது தம்பி ஜோதி பிரசன்னா தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் காயம் அடைந்த ஜான் பிரின்ஸ் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார், ஜோதி பிரசன்னா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story