கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்


கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளி ஆட்டோ  டிரைவர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 20 July 2023 12:15 AM IST (Updated: 20 July 2023 4:32 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி காந்தி நகரை சேர்ந்தவர் மனோகரன் மகன் சக்திவேல் (வயது 37). மாற்றுதிறனாளியான இவர் ஆட்டோ டிரைவராக இருந்து வருகிறார். இவர் நேற்று கோவில்பட்டி அண்ணா பஸ்நிலையம் அருகே ஆட்டோவில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த மற்றொரு ஆட்டோ டிரைவர்களான சுடலைமணி, ராஜேஷ் ஆகிய இருவரும் சக்திவேலை தாக்கினார்களாம். இதில் காயம் அடைந்த சக்திவேல் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றபோது, அங்கு வந்த சுடலைமணி மீண்டும் சக்திவேலை சரமாரியாக தாக்கினாராம். மருத்துவமனையில் இருந்த ஊழியர்கள் சுடலை மணியை காப்பாற்றியுள்ளனர்.

இதை அறிந்த அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு சக்திவேலை தாக்கியவர்களை கைதுசெய்ய கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்தவுடன் சம்பவ இடத்திற்குச் சென்ற கிழக்கு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். மருத்துவமனை அருகே இருந்த சுடலைமணியை போலீசார் பிடித்து விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதை தொடர்ந்து சாலை மறியலை உறவினர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அரை மணிநேரம் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story