கயத்தாறு அருகே விவசாயி மீது தாக்குதல்


கயத்தாறு அருகே விவசாயி மீது தாக்குதல்
x
தினத்தந்தி 6 Sept 2022 4:01 PM IST (Updated: 6 Sept 2022 4:16 PM IST)
t-max-icont-min-icon

கயத்தாறு அருகே விவசாயி மீது தாக்குதல் நடத்திய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே தலையால்நடந்தான்குளம் கிராமத்தை ேசர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 34). விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மாடசாமி மகன் முனியசாமி என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் முனியசாமியின் கூட்டாளிகள் சேர்ந்து தாக்கியதில் காயமடைந்த ராஜேந்திரன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் வழக்குப்பதிவு செய்து முனியசாமி, அவரது கூட்டாளிகளான மூக்கன், அண்ணாமலை, துரை ஆகிய 4பேரை கைது செய்தனர். பின்னர் அந்த 4 பேரும் கோவில்பட்டி கோர்ட்டில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கில் முனியசாமியின் கூட்டாளிகள் 3 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.


Next Story