உணவு டெலிவரி செய்யும் வாலிபர் மீது தாக்குதல்


உணவு டெலிவரி செய்யும் வாலிபர் மீது தாக்குதல்
x

தஞ்சையில் 2 மோட்டார்சைக்கிள்கள் மோதிய சம்பவத்தில் உணவு டெலிவரி செய்யும் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

தஞ்சையில் 2 மோட்டார்சைக்கிள்கள் மோதிய சம்பவத்தில் உணவு டெலிவரி செய்யும் வாலிபரை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

உணவு டெலிவரி நிறுவனம்

தஞ்சையை அடுத்த ஆலக்குடியை சேர்ந்தவர் செந்தில்குமார். இவருடைய மகன் அஜித்குமார் (வயது 25). இவர் தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது மோட்டார்சைக்கிளில் வாடிக்கையாளர்களுக்கு உணவு டெலிவரி செய்ய சென்று கொண்டிருந்தார்.

தஞ்சை விளார் சாலையில் சென்ற போது எதிரே அண்ணாநகர் மாரிக்குளத்தை சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் பிரபாகரன் (31), பூக்கார லாயம் மேட்டுத் தெருவை சேர்ந்த மணி என்பவரின் மகன் மதன் (33), முனியாண்டவர் காலனி ராமமூர்த்தி மகன் சக்திவேல் (30) ஆகிய 3 பேரும் மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்து கொண்டிருந்தனர்.

2 பேர் கைது

அப்போது எதிர்பாராத விதமாக 2 மோட்டார்சைக்கிள்களும் மோதின. இதில் ஆத்திரமடைந்த பிரபாகரன், மதன், சக்திவேல் ஆகிய 3 பேரும் சேர்ந்து அஜித்குமாரை தாக்கி உள்ளனர். இதுகுறித்து அஜித்குமார் தஞ்சை தெற்கு போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபாகரன், மதன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். சக்திவேலை தேடி வருகின்றனர். இதில் பிரபாகரன் மற்றும் சக்திவேல் ஆகிய இருவர் மீது போலீஸ் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story