ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்


ஓட்டல் உரிமையாளர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 8 Aug 2023 1:30 AM IST (Updated: 8 Aug 2023 1:31 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றதை கண்டித்ததால் ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

வடமதுரை அருகே உள்ள வேல்வார்கோட்டை மேற்கு தெருவை சேர்ந்தவர் யாசர் அராபத் (வயது 30). இவர், திண்டுக்கல் சீலப்பாடி பைபாஸ் அருகே ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இவர், வேல்வார்கோட்டையில் உள்ள ஒரு டீக்கடை முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது புதுக்கலராம்பட்டியை சேர்ந்த மருதை மகன் பொன்னர் (24), வைரமலை (20) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றனர். இவர்களை, மெதுவாக செல்லுமாறு யாசர்அராபத் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஊருக்கு சென்று தனது கூட்டாளிகள் சிலரை அழைத்து வந்து யாசர் அரபாத்தை கம்பால் தாக்கினர்.

இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை தடுக்க முயன்றனர். அப்போது அவர்கள் மீது, அந்த கும்பலை சேர்ந்தவர்கள் கல்வீசி தாக்கினர். மேலும் அங்கிருந்த தண்ணீர் தொட்டி, தகர கொட்டகை ஆகியவற்றை சேதப்படுத்தி விட்டு அவர்கள் தப்பி ஓடி விட்டனர். இதுகுறித்து வடமதுரை போலீஸ் நிலையத்தில் யாசர்அராபத் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அங்கமுத்து வழக்குப்பதிவு செய்து பொன்னர், வைரமலை மற்றும் அவர்களது கூட்டாளிகளான அய்யப்பன் (19), முனியன் மகன் பொன்னர் (25), நல்ல தம்பி (42) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story