லோடு ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல்


உடன்குடியில் லோடு ஆட்டோ டிரைவர் மீது தாக்குதல் நடத்திய வழக்கில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

உடன்குடி தேரியூர் அய்யா நகரை மகராஜன் மகன் முத்துக்குமார் (வயது 21). சாதாரகோன் விளையை சேர்ந்த சிவன் மகன் கோவிந்தன் (20). இருவரும் சொந்தமாக லோடு ஆட்டோ வைத்து ஓட்டி வருகின்றனர். கோவிந்தன் அடிக்கடி முத்துக்குமாரின் லோடு ஆட்டோவில் வந்து மோதுவது போல் அவரது லோடு ஆட்டோவை ஓட்டிச் செல்வாராம். இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி இரவு 8 மணி அளவில் முத்துக்குமார் லோடு ஆட்டோவில் உடன்குடி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது பின்னால் வந்த கோவிந்தன் தேரியூர் அய்யா நகரை சேர்ந்த நம்பி மகன் விஜய் (20) ஆகியோர் லோடு ஆட்டோவை முன்னால் நிறுத்தி உள்ளனர். ஆட்டோவில் இருந்த முத்துக்குமாரை வெளியே இழுத்து கோவிந்தன் முகத்தில் சரமாரியாக குத்தினாராம். பின்னர் இருவரும் தாங்கள் வந்த லோடு ஆட்டோவில் ஏறி தப்பி ஓடிவிட்டார்களாம். இதில் காயமடைந்த முத்துக்குமார் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குப்பதிவு செய்து கோவிந்தன், விஜய் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறார்.


Next Story