தாய், மகள் மீது தாக்குதல்


தாய், மகள் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 18 Dec 2022 12:15 AM IST (Updated: 18 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

தட்டார்மடம் அருகே தாய், மகளை தாக்கியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே உள்ள தொட்டிக்காரன்விளை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகேசன் மனைவி பேச்சித்தாய் (வயது 45). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளியான சுடலைக்கண் மகன் மகாராஜன் (45) என்பவருக்கும் இடப்பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவத்தன்று பேச்சித்தாய், அங்குள்ள பஸ்நிறுத்தம் அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த மகாராஜன், வழிமறித்து அவதூறாக பேசி தாக்கியதாகவும், இதனை கண்டித்த அவரது மகளையும் தென்னை மட்டையால் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த 2 ேபரும் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மகாராஜனை தேடி வருகிறார்கள்.


Next Story