மேலூரில் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து நோயாளிகள் மீது தாக்குதல் - 3 பேர் மீது வழக்கு


மேலூரில் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து நோயாளிகள் மீது தாக்குதல் - 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 May 2023 1:43 AM IST (Updated: 22 May 2023 1:44 AM IST)
t-max-icont-min-icon

மேலூரில் அரசு ஆஸ்பத்திரியில் புகுந்து நோயாளிகள் மீது தாக்கிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது

மதுரை

மேலூர்

மதுரை மாவட்டம் மேலூர் அருகிலுள்ள சேக்கிபட்டியை சேர்ந்தவர்கள் பாண்டியன், பழனிச்சாமி. இவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இருதரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டனர். இதில் பாண்டியன் மகன் கண்ணன், பழனிச்சாமிக்கு காயம் ஏற்பட்டது. இருவரும் மேலூர் அரசு ஆஸ்பத்திரியில் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் பாண்டியன் மற்றும் அவரது மகன்கள் பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த பழனிச்சாமியை தாக்கினர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மேலூர் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தி பாண்டியன், பாலமுருகன், மணிகண்டன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story