போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்; வாலிபர் கைது
போலீஸ் ஏட்டு மீது தாக்குதல்; வாலிபர் கைது
நாகர்கோவில்:
நாகர்கோவில் கோட்டார் வைத்தியநாதபுரத்தில் உள்ள ஒரு அம்மன்கோவிலில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற விழாவில் கச்சேரி நிகழ்ச்சிகள் நடந்தன. அப்போது வாலிபர்கள் சிலர் ரோட்டில் நின்று கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாக நடனம் ஆடியதாக கோட்டார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சம்பவ இடத்துக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீஸ் ஏட்டு சதீஷ் ஆகியோர் சென்றனர். அங்கு ரோட்டில் நடனமாடிக் கொண்டிருந்த வாலிபர்களை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் நிற்குமாறு போலீசார் கூறினர்.
அப்போது கோட்டார் வயல் தெருவை சேர்ந்த பிரதீஷ் (வயது 21) மற்றும் அவரது அண்ணன் பிரகாஷ் (24) ஆகியோர் போலீசிடம் வாக்குவாதம் செய்து தகராறு செய்ததாக தெரிகிறது. இதில் ஆத்திரமடைந்த சகோதரர்கள் போலீஸ் ஏட்டு சதீசை சரமாரியாக தாக்கியதுடன், அவரது சட்டையையும் கிழித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் பிரதீசை கோட்டார் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரகாசை தேடி வருகிறார்கள்.