முதியவர் மீது தாக்குதல்


முதியவர் மீது தாக்குதல்
x

தட்டார்மடத்தில் முதியவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தட்டார்மடம் அன்னாள்நகர் பகுதியை சேர்ந்தவர் அந்தோணிராஜ் மனைவி ஜென்சிலின் ஜோதி பபிதா (வயது 40). இவருக்கும், அவருடைய தந்தை அந்தோணி மாதவடியானுக்கும் (74) இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது.

சம்பவத்தன்று அந்தோணி மாதவடியான் சைக்கிளில் தோட்டத்துக்கு சென்றார். அப்போது ஜென்சிலின் ஜோதி பபிதாவின் 14 வயது மகன், அந்த சைக்கிளை எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்தோணி மாதவடியான், மகளின் வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அந்தோணி மாதவடியானை பேரன் மண்வெட்டியை எடுத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார் மடம் போலீசார், ஜென்சிலின் ஜோதி பபிதா, அவருடைய மகன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story