சுற்றுலா பயணி மீது தாக்குதல்
குன்னூர் காட்சி முனையில் சுற்றுலா பயணி மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
நீலகிரி
குன்னூர்,
மராட்டிய மாநிலம் மும்பையில் இருந்து பெண் உள்பட 7 பேர் குன்னூர் அருகே டால்பின் நோஸ் காட்சி முனைக்கு வந்தனர். அங்கு அவர்கள் இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தனர். அப்போது மும்பை பெண் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிள் மீது அமர்ந்து புகைப்படம் எடுத்து உள்ளார். இதனால் 15 பேர் கொண்ட கும்பல் மும்பை சுற்றுலா பயணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மும்பை சுற்றுலா பயணிகள் மேல் குன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து இன்ஸ்பெக்டர் கவிதா இரு தரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சம்பவம் குறித்து சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story