புவனகிரி அருகே திரிசூலம் வைத்து வழிபட்ட திருநங்கை மீது தாக்குதல் போலீஸ் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு


புவனகிரி அருகே    திரிசூலம் வைத்து வழிபட்ட திருநங்கை மீது தாக்குதல்    போலீஸ் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு
x

புவனகிரி அருகே திரிசூலம் வைத்து வழிபட்ட திருநங்கை மீது தாக்குதல் நடத்தினா். இதனால் அவா்கள் போலீஸ் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்


புவனகிரி,

புவனகிரி அருகே உள்ள பூ.மணவெளி கிராமத்தை சேர்ந்த வாசுகி என்ற திருநங்கை, தனது சொந்த இடத்தில் கோவில் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியுள்ளார். மேலும் அந்த இடத்தில் திரிசூலம் வைத்து அவர் வழிபட்டு வந்தார். இதற்கு கிராமத்தை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து திருநங்கை வாசுகியை தாக்கியுள்ளனர். இதனால் வாசுகி, சக திருநங்கைகளுடன் புகார் கொடுக்க நேற்று முன்தினம் நள்ளிரவில் புவனகிரி போலீஸ் நிலையத்திற்கு சென்றார். அங்கு பணியில் இருந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார், புகார் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story