தட்டார்மடம் அருகே பெண் மீது தாக்குதல்
தட்டார்மடம் அருகே பெண்ணை தாக்கிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
தட்டார்மடம்:
தட்டார்மடம் அருகே அரசூர் மோடி நகரில் வசித்து வருபவர் ராமச்செல்வி (வயது 37). இவரது பக்கத்து வீட்டில் வசித்து வருபவர் ஞானராஜ் மகன் முத்துகுமார். இவர் ஓட்டல் தொழிலாளி. இந்நிலையில் கடந்த 14-ந் தேதி மோடி நகரில் நடந்த இசக்கியம்மன் கோவில் கொடை விழாவிற்கு வந்த வில்லிசை கலைஞர் ஒருவரின் செல்போன் திருடு போனது. இந்த செல்போனை முத்துக்குமார் என்பவர் எடுத்ததாக ராமசெல்வி கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த முத்துக்குமார் கம்பால் ராமச்செல்வியை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார். இதில் காயமடைந்த ராமசெல்வி ஆஸ்பத்திரியில் சிகிச்சைபெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில் தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெல்சன் வழக்குபதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தார்.
Related Tags :
Next Story