சொத்து பிரச்சினையில் வாலிபர் மீது உருட்டுக்கட்டையால் தாக்குதல்


சொத்து பிரச்சினையில் வாலிபர் மீது உருட்டுக்கட்டையால் தாக்குதல்
x
தினத்தந்தி 24 July 2023 2:30 AM IST (Updated: 24 July 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

போடியில் சொத்து பிரச்சினையில் வாலிபரை உருட்டுக்கட்டையால் தாக்கிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தேனி

போடி மின்வாரிய அலுவலக தெருவை சேர்ந்தவர் பிரேம்சந்தர் (வயது35). இவருக்கும், அவரது உறவினர் அமர்நாத் (70) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் போடி அருகே மரிமூர் பகுதியில் உள்ள தனது தோட்டத்தில் பிரேம்சந்தர் இருந்தார். அப்போது அங்கு வந்த அமர்நாத், அவரது மகன் ஆனந்தகோபி மற்றும் 2 பேர் சேர்ந்து தகராறு செய்ததுடன், பிரேம்சந்தரை உருட்டுக்கட்டையால் தாக்கினர்.

இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக போடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குரங்கணி போலீஸ் நிலையத்தில் பிரேம்சந்தர் புகார் அளித்தார். அதன்பேரில் அமர்நாத், அவரது மகன் ஆனந்தகோபி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story