கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி
வாலாஜா அருகே கோவில் உண்டியலை உடைத்து திருட முயற்சி நடைபெற்றுள்ளது.
ராணிப்பேட்டை
வாலாஜா அடுத்த வன்னிவேடு கிராமத்தில் அகத்தீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த 25-ந் தேதி இரவு பூஜைகளை முடித்து விட்டு கோவிலை அர்ச்சகர் பூட்டி கொண்டு சென்றுவிட்டார். மீண்டும் காலையில் வழக்கம்போல் கோவிலை திறக்க அர்ச்சகர் சென்றார். அப்போது கோவிலில் பூட்டு, மூலவர் சன்னதி எதிரில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது. பணம் எதுவும் திருட்டுப்போக வில்லை. கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை மணி ஆகியவை உடைக்கப்பட்டிருந்தன. கோவில் பூஜை அறையில் உள்ள பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் ஏகவள்ளி வாலாஜா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர் செல்வி சம்பவ இடத்தில் பதிவான ரேகைகளை பதிவு செய்துதார்.
Related Tags :
Next Story