சந்தனமரம் வெட்டி கடத்த முயற்சி


சந்தனமரம் வெட்டி கடத்த முயற்சி
x

கருங்கல் அருகே சந்தனமரம் வெட்டி கடத்த முயற்சி

கன்னியாகுமரி

கருங்கல்,

கருங்கல் அருகே உள்ள பாலப்பள்ளம் படுவூர் பகுதியைச் சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் நின்ற சந்தன மரத்தை வனத்துறையிடம் அனுமதி பெறாமல் லாசர் என்பவர் மூலம் வெட்டிக் கொண்டிருந்தார். இதுபற்றி தகவல் அறிந்த கருங்கல் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் மரத்தை வெட்டிக் கொண்டிருந்த லாசர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். பின்னர், இதுகுறித்து வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே அங்கு வெட்டப்பட்டு கிடந்த 11 கிேலா சந்தனமர கட்டைகளை சேகரித்தனர். பின்னர், அங்கு வந்த வனத்துறை ஆய்வாளர் விஜயகுமாரிடம் சேகரிக்கப்பட்ட 11 கிலோ சந்தனமரக்கட்டைகளை கருங்கல் போலீசார் ஒப்படைத்தனர்.


Next Story