நாகூர் தர்கா கட்டிட மேம்பாட்டு பணிக்கு நிதி உதவி பெற முயற்சி


நாகூர் தர்கா கட்டிட மேம்பாட்டு பணிக்கு நிதி உதவி பெற முயற்சி
x

நாகூர் தர்கா கட்டிட மேம்பாட்டு பணிக்கு நிதி உதவி பெற முயற்சி முகமதுஷாநவாஸ் எம்.எல்.ஏ. தகவல் அளித்தார்

நாகப்பட்டினம்

நாகூர்:

நாகை மாவட்டம் நாகூரில் பிரசித்தி பெற்ற நாகூர்ஆண்டவா் தர்கா உள்ளது. சுமார் 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகூர் தர்காவில் பல பழங்கால கட்டிடங்கள் உள்ளன. இதை பராமரிக்க மற்றும் மேம்படுத்த நிதி தேவைபடுகிறது.இந்தநிலையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கடந்த மாதம் நாகூர் தர்காவில் ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து நாகை சட்டமன்ற உறுப்பினர் முகமது ஷாநவாஸ் நேற்று முன்தினம் நாகூர் தர்காவை முழுமையாக ஆய்வு செய்தார். அப்போது அவர் தர்கா நிர்வாகிகளுடன் தர்கா கட்டிடங்களை பார்வையிட்டார். அப்போது அவா் நாகூர் தர்கா கட்டிட மேம்பாட்டு பணிக்கு நிதி உதவி பெற முயற்சிக்கப்படும் என கூறினார்.


Next Story