கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி; லாரி டிரைவர் கைது


கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயற்சி; லாரி டிரைவர் கைது
x

கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே உள்ள அட்டக்குளம் பகுதியில் சாலையோரம் நர்சிங் கல்லூரி மாணவி ஒருவர் நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது, அங்கு சாலையோரத்தில் சிமெண்டு மூட்டைகளுடன் நின்று கொண்டு இருந்த லாரியில் இருந்து அதன் டிரைவர் சேலத்தை சேர்ந்த சரவணக்குமார் (வயது 33) என்பவர் மாணவியை கையை பிடித்து இழுத்து பலாத்காரம் ெசய்ய முயன்றதாக கூறப்படுகிறது. மாணவி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்து, சரவணக்குமாருக்கு தர்ம அடி கொடுத்து கடையநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார், அவரை கைது செய்து அழைத்து சென்றனர்.


Next Story