திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி ராமநத்தம் டிரைவர் கைது
திருமணம் செய்ய மறுத்த கள்ளக்காதலியின் மகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற ராமநத்தம் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநத்தம்,
கள்ளக்காதல்
கடலூர் மாவட்டம் ராமநத்தம் அருகே உள்ள ம.பொடையூர் கிராமத்தை சேர்ந்தவர் கிச்சான் மகன் செந்தில்(வயது 27). டிரைவரான இவருக்கு வெண்ணிலா என்பவருடன் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் செந்திலுக்கும், ஆவட்டியில் தங்கி ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வரும் திண்டுக்கல் மாவட்டம் மேலத்திப்பம்பட்டியை சேர்ந்த 33 வயதுடைய பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கம் நாளடைவில் அவர்களிடையே கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தத்து உல்லாசம் அனுபவித்து வந்தனா். கள்ளக்காதலியின் 18 வயதுடைய மகன் சென்னையில் வேலை செய்து வருகிறார். 15 வயதுடைய மகள், அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
கள்ளக்காதலியின் மகளுக்கு காதல் வலை
இந்த நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு செந்தில், தனது கள்ளக்காதலியை பெரங்கியத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் தங்க வைத்தார். அங்கு செந்தில் அடிக்கடி வந்து சென்றார். இதனால் அவரது காமபார்வை கள்ளக்காதலியின் மகள் மீது விழுந்தது. அவரை உடனடியாக திருமணம் செய்யவும் முடிவு செய்தார்.
இதற்காக அவர் முதலில் அந்த மாணவியை காதலிப்பதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவி, தனது தாயிடம் கூறியுள்ளார். அவருக்கும் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தார்.
பாலியல் பலாத்கார முயற்சி
இதனிடையே செந்தில், தனது கள்ளக்காதலியை தச்சூர் காப்புக்காட்டிற்கு அழைத்துச் சென்று உனது மகளை காதலிப்பதாகவும், அவரை காதலிக்க சொல்லுமாறும் கூறியுள்ளார். இதற்கு மறுத்த கள்ளக்காதலியை அவர் சரமாரியாக அடித்து, மிரட்டினார்.
பின்னர் பெரங்கியத்துக்கு வந்த செந்தில், அந்த மாணவியிடம் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்ள சம்மதிக்குமாறும் கூறியுள்ளர். மேலும் அவரை, செந்தில் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். இதற்கு மறுத்த மாணவி, நைசாக தப்பித்து வீட்டைவிட்டு வெளியேறி பக்கத்து வீட்டில் வசித்து வரும் ஒருவரது செல்போனை வாங்கி பெண் குழந்தைகள் மீதான குற்றங்கள் தடுப்பு பிரிவான 1098 எண்ணுக்கு புகார் செய்தார்.
அதன்பேரில் திட்டக்குடி மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருபாலட்சுமி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து செந்திலை கைது செய்தார்.