Normal
மயிலம் அருகே பரபரப்பு பிடாரியம்மன் கோவிலில் திருட முயற்சி
மயிலம் அருகே பிடாரியம்மன் கோவிலில் மா்ம நபா்கள் திருட முயற்சி செய்தனா்.
விழுப்புரம்
மயிலம்,
மயிலம் அருகே உள்ள தென்பசார் கிராமத்தில் புதிதாக பிடாரியம்மன் கோவில் கட்டப்பட்டு ,ஒரு மாதத்திற்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்றது. கோவிலில் தினசரி பூஜை நடைபெற்று, பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
நேற்று கோவிலின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த கிராமத்து மக்கள் அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, அங்கிருந்த உண்டியல் மற்றும் மின்சாரத்தில் இயங்கும் மேளம் ஆகியவற்றை திருட முயன்று இருப்பது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் அறிந்த மயிலம் போலீசார் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டனர். நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கோவிலில் திருட முயற்சி செய்து, இருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story