ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திருட முயற்சி


ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் திருட முயற்சி
x

இச்சிபுத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மர்ம நபர்கள் திருட முயற்சி செய்துள்ளனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தை அடுத்த இச்சிபுத்தூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு நேற்று காலை தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் வந்த போது பள்ளியின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பள்ளியில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. மர்ம நபர்கள் பீரோவை உடைத்து திருட முயன்சி செய்துள்ளனர். ஆனால் பொருட்கள் எதுவும் இல்லாததால் பள்ளியின் அருகே உள்ள ஆழ்துளை கிணற்றின் மின் மோட்டாருக்கு செல்லும் மின் ஒயர்களை சேதப்படுத்தி விட்டு சென்றுள்ளனர். இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story