தொழிலாளி தீக்குளிக்க முயற்சி
சேலம் லைன்மேட்டில் தொழிலாளி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேலம்
அன்னதானப்பட்டி
சேலம் சூரமங்கலம், போடிநாயக்கன்பட்டி ஞானசம்பந்தர் தெருவைச் சேர்ந்தவர் அன்பழகன் (வயது 32). கூலித்தொழிலாளி. இவருக்கும், இவரது உறவினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் அன்பழகன் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் மாலை லைன்மேட்டில் உள்ள மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு வந்த அவர், திடீரென தான் வைத்திருந்த மண்எண்ணெயை உடலின் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்த அங்கிருந்த போலீசார் தீக்குளிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தினர். இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story