ஓய்வுபெற்ற கப்பல்படை அதிகாரி வீட்டில் திருட முயற்சி


ஓய்வுபெற்ற கப்பல்படை அதிகாரி வீட்டில் திருட முயற்சி
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் ஓய்வுபெற்ற கப்பல்படை அதிகாரி வீட்டில் திருட முயற்சி நடந்தது.

விழுப்புரம்

விழுப்புரம்:

விழுப்புரம் பானாம்பட்டு ராகவேந்திரா நகரைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன் (வயது 52). இவர் கப்பல்படையில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வுபெற்றார். கடந்த மாதம் 20-ந்தேதி தனது மகள்களுடன் அபுதாபிக்குச் சென்றுள்ளார். இதனிடையே நேற்று காலை பக்கத்துவீட்டைச் சேர்ந்த மேத்யூ என்பவர் பார்த்தபோது சத்தியநாராயணன் வீட்டின்முன்பக்க கதவில் பூட்டு திறந்து கிடந்தது. இது பற்றி அவர் உடனடியாக விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் சத்தியநாராயணனை செல்போனில் போலீசார் தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது வீட்டில் நகை, பணம் ஏதும் வைக்கவில்லை என்றார். ஆனால் வீட்டில் அனைத்து பொருட்களும் அப்படியே இருக்கிறது. நள்ளிரவில் திருடவந்த மர்மநபர்கள், வீட்டில் நகை-பணம் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story