4 வீடுகளில் திருட முயற்சி


4 வீடுகளில் திருட முயற்சி
x

4 வீடுகளில் திருட முயற்சி

தஞ்சாவூர்

தஞ்சை அருகே பூட்டை உடைத்தும், ஓடுகளை பிரித்தும் 4 வீடுகளில் திருட முயன்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் மர்மநபர்கள் நடமாடிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியது.

திருட முயற்சி

தஞ்சையை அடுத்த மேலமானோஜிப்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்த 2 மர்ம நபர்கள் ஒரு வீட்டுக்குள் புகுந்து பீரோவை உடைத்தனர். அதில், விலை உயர்ந்த பொருட்கள் இல்லாமல், துணிகள் மட்டுமே இருந்ததால், விட்டுச் சென்றனர்.

இதையடுத்து அருகிலுள்ள மற்றொரு வீட்டுக்குச் சென்று, அங்கிருந்த பைகளை எடுத்தனர். அதில், ஆவணங்கள் சில இருந்ததால், அதையும் விட்டுச் சென்றனர். பின்னர், மற்றொரு வீட்டில் ஓடுகளைப் பிரித்து உள்ளே சென்றனர். விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் கிடைக்காததால், மற்றொரு வீட்டின் பின்புறக் கதவை உடைக்க முயற்சி செய்தனர். அதை உடைக்க முடியாததால், மர்ம நபர்கள் தப்பிச் சென்று விட்டனர்.

போலீசார் விசாரணை

2 மர்ம நபர்கள் நடமாடிய காட்சிகள் அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளன. இதன் அடிப்படையில் கள்ளப்பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story