ரப்பர் ஷீட் குடோனில் திருட முயற்சிஆட்கள் வந்ததால் காரை விட்டு சென்ற மர்ம ஆசாமிகள்


ரப்பர் ஷீட் குடோனில் திருட முயற்சிஆட்கள் வந்ததால் காரை விட்டு சென்ற மர்ம ஆசாமிகள்
x

குலசேகரம் அருகே ரப்பர் ஷீட் குடோனில் திருட முயற்சி ஆட்கள் வந்ததால் காரை விட்டு சென்ற மர்ம ஆசாமிகள்

கன்னியாகுமரி

குலசேகரம்,

குலசேகரம் அருகே உள்ள மாஞ்சக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது42). இவர் ரப்பர் ஷீட் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இதற்காக பிணந்தோடு பகுதியில் கடை மற்றும் குடோன் அமைத்துள்ளார். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 1 மணியளவில் 2 மர்ம நபர்கள் ஒரு காரில் இவரது குடோனுக்கு வந்தனர். அவர்கள் குடோனின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 2 கட்டு ரப்பர் ஷீட்டுக்களை திருடி வெளியே வந்தனர். இந்த காட்சியை ரமேஷ் நாகர்கோவிலில் இருந்தபடி செல்போனில் இணைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா மூலம் பார்த்தார். உடனே அவர் குடோன் அருகில் தங்கியிருந்த தனது வேலையாட்களுக்கு தகவல் கூறினார். இதையடுத்து அவர்கள் விரைந்து குடோனுக்கு வந்தனர். ஆட்கள் வருவதை கண்டதும் மர்ம நபர்கள், ரப்பர் ஷீட்டை போட்டுவிட்டு காரையும் விட்டு, விட்டு தப்பியோடி விட்டனர்.

இதுகுறித்து ரமேஷ் குலசேகரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், மர்ம நபர்கள் விட்டு சென்ற காரை பறிமுதல் செய்து அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story